உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுக்காததால் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க. நிர்வாகி
சேலத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுக்காததால் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க. நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 52), துணி வியாபாரம் செய்யும் இவர் ஓமலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் துணை அமைப்பாளராக உள்ளார்.
முருகன் தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓமலூர் 8-வது வார்டில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு ‘சீட்’ கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முருகன் நேற்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
முதல்-அமைச்சர் வீடு அருகே வந்ததும் முருகன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் முருகன் கூறும்போது, ‘தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 5 முறை மனு கொடுத்தும் எனக்கு சீட் கிடைக்கவில்லை. இந்த முறையும் சீட் கொடுக்காததால் மனவேதனை அடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story