திருப்பத்தூரில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினா-விடை புத்தகம் - தலைமையாசிரியர்களிடம் கலெக்டர் வழங்கினார்
திருப்பத்தூரில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினா-விடை புத்தகங்களை தலைமையாசிரியர்களிடம் கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை (திருப்பத்தூர்), எல்.செல்வராணி (வாணியம்பாடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வி துறை ஆய்வாளர் தாமோதரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு, அரசு சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில் மாணவ -மாணவிகள் எளிதில் வெற்றி பெற உருவாக்கப்பட்ட மாதிரி வினா-விடை புத்தகங்களை வழங்கினார். இதனை தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வரன் பிள்ளை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன் உள்பட தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி கல்வி துறை ஆய்வாளர் சி.தன்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story