மராட்டியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி இயற்கை பேரிடர் நிதி: மத்திய அரசிடம் கோரிக்கை


மராட்டியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி இயற்கை பேரிடர் நிதி: மத்திய அரசிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2019 4:58 AM IST (Updated: 19 Dec 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

ரூ.14 ஆயிரம் கோடி இயற்கை பேரிடர் நிதி வழங்கக்கோரி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் பருவமழை காலத்தின் போது சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தில்மிதந்தன. மழை வெள்ளத்துக்கு 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவம் தவறிபெய்த மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு பெரும்நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், டெல்லியில் நேற்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மராட்டிய மாநிலம் சார்பில் நிதி மந்திரி ஜெயந்த் பாட்டீல் கலந்து கொண்டார்.

அப்போது, மேற்படி இயற்கை பேரிடர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக ஜெயந்த் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Next Story