சங்கராபுரம் பகுதியில், வெங்காய பயிர்களை அதிகாரிஆய்வு
சங்கராபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காய பயிர்களை அதிகாரி ஆய்வு செய்தார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசம்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிர்களை சங்கராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அங்கிருந்த விவசாயிகளிடம், தற்போது ஏற்பட்டுள்ள பனி மற்றும் வளிமண்டல காற்றில் உள்ள ஈரப்பதத்தினால் வெங்காய பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு நோய் தாக்குதல் ஏற்பட்டால் அசஸ்டோபின், டைபெனகோனசால், போரான், கால்சியம் நைட்ரேட் ஆகிய மருந்துகளை சேர்த்து பயிரில் தெளிக்க வேண்டும். மேலும் நோய் பாதிப்பு அதிகமுள்ள பயிர்களில் பைரோகிலாஸ்டோபின், மித்திரம், போரான், கால்சியம் நைட்ரேட் ஆகிய மருந்துகளை கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நோய் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நல்ல மகசூலை விவசாயிகள் பெற முடியும் என்றார். இந்தஆய்வின் போது தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வேலன், ராஜேஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story