பாடாலூரில் மரத்தில் கார் மோதி 2 டிரைவர்கள் பலி; 2 பேர் படுகாயம்
பாடாலூரில் மரத்தில் கார் மோதியதில் 2 டிரைவர்கள் இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். வெளிநாடு சென்ற நண்பரை வழியனுப்பிவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பாடாலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா தொளார் அருகே உள்ள செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருடைய மகன் செந்தில்ராஜ் (வயது 30). அரசு பஸ் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகன் மருதமுத்து (29), பெரியசாமி மகன் மணிகண்டன் (27), முத்தையா மகன் சதீஷ்குமார் (25) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இதில் மருதமுத்து தனியார் பள்ளி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் செந்தில்ராஜ், மருதமுத்து ஆகியோரின் நண்பரான திட்டக்குடி தாலுகா நெடுங்குளத்தை சேர்ந்த மணிவேல், சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். அவரை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வழியனுப்புவதற்காக, அவருடன் செந்தில்ராஜ், மருதமுத்து, மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோர் காரில் சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மணிவேல் விமானத்தில் சென்ற பின்னர், செந்தில்ராஜ் உள்ளிட்ட 4 பேரும் நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை மருதமுத்து ஓட்டினார்.
2 பேர் பலி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரை ஓட்டிய மருதமுத்து, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த செந்தில்ராஜ் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டன், சதீஸ்குமார் ஆகியோரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த செந்தில்ராஜ், மருதமுத்து ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி பார்வையிட்டார்.
இந்தவிபத்து தொடர்பாக பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்தார். விபத்தில் சிக்கியவர்கள், குடிபோதையில் பயணம் செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த செந்தில்ராஜ், மருதமுத்து ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவர்களுடைய உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. வெளிநாடு சென்ற நண்பரை வழியனுப்பி விட்டு வந்த 2 பேர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story