குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலாப்பட்டு,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதில் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளனர். புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று பகல் 12 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென மனித சங்கிலி போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
மாணவ-மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி மத்திய அரசுக்கு எதிராகவும், சென்னை பல் கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
இந்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. இதன்பின் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story