பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம் - கவர்னர் கிரண்பெடி தகவல்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2019 4:45 AM IST (Updated: 20 Dec 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எந்த போலீஸ்நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மிகவும் பயனுள்ள ஆலோசனை வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பல்வேறு பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகாரை எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவ்வாறு பெண்கள் புகார் கூறும் போது எல்லை பிரச்சினைகளை குறிப்பிட்டு காட்டி வேறு காவல்நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்த கூடாது. முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்களுக்கான விசாரணையை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இதனை அரசு அதிகாரிகள் தனியாக கண்காணிக்கும் வசதியும் தற்போது உள்ளது. முக்கியமாக பாலியல் குற்றவாளிகளின் தகவல்களை தேசிய தரவு தளத்தில் இணைக்க வேண்டும். தற்போது 7 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்த பட்டியலில் உள்ளனர்.

அவசர உதவிக்கு பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண் 100. இது தவிர தேசிய அளவில் இணைக்கும் அழைப்பு எண் 112. இதன் பயன்பாட்டை மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story