திருத்தணி முருகன் கோவிலில் காணிக்கை எண்ணும் போது நகை, பணம் திருடிய - 3 பேர் கைது


திருத்தணி முருகன் கோவிலில் காணிக்கை எண்ணும் போது நகை, பணம் திருடிய - 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 3:45 AM IST (Updated: 20 Dec 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் போது அங்கு சேவை பணியில் ஈடுபட்டு நகை, பணம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைத்து மாதம் தோறும் எண்ணுவது வழக்கம். கோவில் உண்டியல்களில் வசூலான காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், வங்கிஊழியர்கள் மற்றும் சேவைபணியாளர்கள் கலந்துகொண்டு காணிக்கைகளை எண்ணினார்கள்.

அப்போது அங்கு காணிக்கைகளை எண்ணும் பணியில் இருந்த சேவை பணியாளர்களான வேலூர் மாவட்டம் நெல்வாயில் பகுதியை சேர்ந்த சூர்யபிரபா (வயது 60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாவித்திரி (45), நாகேந்திரன் (47) ஆகியோர் அடிக்கடி வெளியே சென்று வருவதை பார்த்து கோவில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் முருக பெருமானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை மறைத்து எடுத்து கொண்டு செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக அவர்கள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த 100 கிராம் தங்கநகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை கைப்பற்றினர். அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story