நெற்பயிர்களில் பரவும் ஆனைக்கொம்பன் நோயை கட்டுப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம்


நெற்பயிர்களில் பரவும் ஆனைக்கொம்பன் நோயை கட்டுப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 Dec 2019 3:45 AM IST (Updated: 21 Dec 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் நெற்பயிர்களில் பரவும் ஆனைக்கொம்பன் நோயை கட்டுப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உச்சுவாடி, கிளியனூர், சோலாட்சி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், அரிச்சந்திரபுரம், பழையனூர், நாகங்குடி ஆகிய பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரில் ஒருபோக சாகுபடியாக அப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை செய்தனர்.

இதற்காக அவர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்கின்றனர். இந்தநிலையில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து கதிர் வரும் நிலையில் கதிரின் குருத்து பகுதியில் ஆனைக்கொம்பன் நோய் தாக்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோயினால் எதிர்பார்த்த அளவு பயிர்களின் வளர்ச்சி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆதலால் இப்பகுதி விவசாயிகள் ஆனைக்கொம்பன் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த தீவிர நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வயல்களில் தெளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு தடுப்பு பணிகள் குறித்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆலோசனை கேட்டும், செயல்முறை விளக்கம் தெரிந்து கொண்டும் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மற்ற வி‌‌ஷ பூச்சி களைவிட ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் போனதாலும், பனிப்பொழிவு காலங்களில் தேவையற்ற மழை பெய்து வருவதாலும்தான் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் நெற்பயிரில் பரவி வருகிறது. ஆதலால் இந்த நோயை கட்டுப்படுத்தும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என கூறினர்.

Next Story