திருக்கோவிலூர் அருகே, விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலைமறியல்
திருக்கோவிலூர் அருகே விலையில்லா மடிக் கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு இதுநாள் வரை தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து ஜி.அரியூர் அரசு பள்ளி எதிரில் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலையில் மாணவர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது விரைவில் மடிக்கணினி வழங்க துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் 11 மணியளவில் வாபஸ் பெறப்பட்டது. இதன்பிறகு அவ்வழியே போக்குவரத்து சீரடைந்தது.
Related Tags :
Next Story