காங்கிரஸ் தலைவர்கள் மங்களூரு செல்வதை தவிர்க்க வேண்டும்; மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
மங்களூருவில் வன்முறை அரங்கேறியுள்ளது. அதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதரே நேரடி காரணம். அவர் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசிய பிறகு இந்த வன்முறை நடந்துள்ளது. தற்போது அங்கு நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. வெளியில் இருந்து வருபவர்களை மங்களூருவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. வெளியில் இருந்து வருபவர்கள் பேசி வன்முறையை தூண்டும் நிலை உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் மங்களூருவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலையும். அங்கு நிலைமை சீராகும் வரை யாரும் செல்ல வேண்டாம். சித்தராமையா உள்பட யாரும் செல்ல வேண்டாம்.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
Related Tags :
Next Story