பட்டா கொடுத்த நிலத்தில் பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை
பட்டா கொடுத்த நிலத்தில் பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாதுமலையில் உள்ள கொத்தனூர், வழுதலம்பட்டு, விளாங்குப்பம், நடுக்குப்பம் கிராமங்களில் பூர்வீக பழங்குடியின மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக பயிர் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வன நிலம் என்று சொல்லி பட்டா வழங்கப்படவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு 2006-ம் ஆண்டு வன மசோதா சட்டம் நிறைவேற்றிய பிறகு மேற்கண்ட கிராமங்களில் 91 மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள், இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என கூறி இங்கு பயிர் செய்யக்கூடாது என்றனர். எனவே, பட்டா கொடுத்த நிலத்தில் பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும், மேலும் வழுதலம்பட்டு, விளாங்குப்பம் பகுதிகளில் 174 பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும் என கூறிய மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு, தலைவர் லட்சுமணன்ராஜா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் கலெக்டர் சிவன்அருளை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story