திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும் நாகர்கோவில்-தாம்பரம் ரெயிலை மானாமதுரை வழியாக இயக்க வேண்டும் - தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை


திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும் நாகர்கோவில்-தாம்பரம் ரெயிலை மானாமதுரை வழியாக இயக்க வேண்டும் - தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2019 3:45 AM IST (Updated: 21 Dec 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும் நாகர்கோவில்-தாம்பரம் ரெயிலை மானாமதுரை வழியாக இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர், 

தென்மாவட்டங்களில் இருந்து அறிவிக்கப்பட்ட நாகர்கோவில்-தாம்பரம், செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு இல்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தென்மாவட்ட மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரெயில்வே நிர்வாகத்துக்கு அதிக வருவாயை ஈட்டிதரும் நிலை உள்ளது.

இந்தநிலையில் விருதுநகர்-மதுரை இடையே ரெயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுவதாகவும், திண்டுக்கல்லில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் என்றும் தென்னக ரெயில்வேநிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர்-நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை பணி ஏதும் நடைபெறாத நிலையில் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயிலை விருதுநகர் வரை இயக்குவதில் எந்த சிரமமும் இல்லை.

விருதுநகரில் இருந்து மானாமதுரை அகலரெயில்பாதை வழியாக இந்த ரெயிலை மதுரைக்கு இயக்கி அங்கிருந்து தாம்பரத்துக்கு வழக்கம்போல் இயக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் தொடர்ந்து இந்த ரெயிலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதோடு, விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி மக்களும் இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை திண்டுக்கலில் இருந்து இயக்கும் முடிவை மாற்றி தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக தாம்பரத்துக்கு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யும்போது பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த ரெயிலை வழக்கம்போல் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story