வத்திராயிருப்பு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு; கருப்புக்கொடி கட்டி கடைகள் அடைப்பு


வத்திராயிருப்பு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு; கருப்புக்கொடி கட்டி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன.

வத்திராயிருப்பு,

இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி பகுதியில் பள்ளிவாசல் தெரு, தைக்காதெரு, அன்சாரி தெரு, ரகுமத் நகர், கிழவன் கோவில் ஆகிய இடங்களில் 1500-க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில் கூமாப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் தங்களுடைய தெருக்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தெருக்கள் மற்றும் மெயின் வீதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.

Next Story