மங்களூரு துப்பாக்கி சூட்டுக்கு எடியூரப்பாவே பொறுப்பு; டி.கே.சிவக்குமார் பேட்டி


மங்களூரு துப்பாக்கி சூட்டுக்கு எடியூரப்பாவே பொறுப்பு; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2019 4:15 AM IST (Updated: 21 Dec 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் முஸ்லிம் மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் தேவையின்றி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்.

அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டதா?. போராட்டங்களை சகித்துக்கொள்ள இந்த அரசு தயாராக இல்லை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அதிகளவில் போராட்டங்கள் நடந்தன. எங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் நாங்கள் யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story