வெவ்வேறு சம்பவங்களில் காதல் திருமணம் செய்தவர்-எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் காதல் திருமணம் செய்தவர் மற்றும் எலக்ட்ரீசியன் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
துவாக்குடி,
திருவெறும்பூர் அம்பேத்கர் நகர், கம்பன் தெருவை சேர்ந்த சிவசாதகன் மகன் சரவணன்(வயது 38). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரோஸ்மேரி என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி சிந்தாமணியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சரவணன் மீண்டும் தனது தாய் மற்றும் தம்பி யுடன் கம்பன் தெருவில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சரவணனின் தாய், தம்பி ஆகியோர், ஸ்ரீரங்கம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலக்ட்ரீசியன்
இதேபோல் திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 34). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக சந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story