மக்கள் மனதில் சின்னங்களை பதியவைக்க பல்வேறு யுக்திகளை கையாளும் வேட்பாளர்கள்
மக்கள் மனதில் சின்னங்களை பதியவைக்க பல்வேறு யுக்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய 8 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட ஊராட்சி வார்டு, ஒன்றிய வார்டுக்கு அரசியல் கட்சியினர் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு கட்சி சார்பற்று அனைவரும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் அந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆட்டோ ரிக்ஷா, பூட்டுசாவி, கை உருளை, ஏணி, மூக்கு கண்ணாடி, திறவுகோல், சீப்பு, கட்டில், கார், சங்கு, அரிக்கேன் விளக்கு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இணையதள பிரசாரம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற வாக்காளர்கள் ஒவ்வொருவரும் 4 ஓட்டினை பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குசீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது கிராமபுறத்திலும் கூட ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதால், வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேட்பாளரின் பெயர், எந்த பொறுப்புக்கு போட்டியிடுகிறார்? போன்ற தகவல்களை உள்ளடக்கி பிரசாரம் நடந்து வருகிறது.
பிரசார யுக்திகள்
மேலும் தாங்கள் போட்டியிடக்கூடிய சின்னங்களை மக்கள் மனதில் பதியவைக்க பல்வேறு யுக்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருவதையும் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கீடு என்றால் அது தொடர்பான விளம்பர தட்டிகளை ஆட்டோவில் கட்டி கொண்டு வலம் வருவது, பொம்மை ஆட்டோக்களை பிரசாரத்தின் போது தூக்கி காண்பிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர். சீப்பு சின்னம் என்றால் சீப்பினை எடுத்து தலைவாரி காண்பிப்பது, மூக்கு கண்ணாடி சின்னம் என்றால் அதனை அணிந்து காண்பிப்பது என வேட்பாளர்கள் பலவகைகளில் அசத்து கின்றனர்.
மேலும் அச்சடிப்பவர் மற்றும் வெளியீட்டாளரின் பெயர், முகவரி குறிப்பிட்டு சுவரொட்டி மூலமாகவும், துண்டு பிரசுரம் வினியோகித்தும் பல்வேறு வேட்பாளர்கள் பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
தட்டிகள் வைப்பதில் ஆர்வம்
வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் கரூர் ரெயில்வே ஜங்ஷன், ஜவகர்பஜார், செங்குந்தபுரம், கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் கடைகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் தொழிலாளர்களை நியமித்து அங்கேயே விளம்பர தட்டிகளுடன் பேனரை பொருத்தி கொடுக்கும் பணியும் படுஜோராக நடக்கிறது. ரூ.250, ரூ.350, ரூ.650, ரூ.ஆயிரம் ரூ.2 ஆயிரம் என்கிற விலையில் அளவுக்கு ஏற்றாற்போல் விளம்பர தட்டிகள் தயார் செய்து கொடுக்கப்படுகின்றன. மேலும் அங்கேயே பிரசார வாகனங்கள் கொண்டுவரப்பட்டு அதில் தட்டிகளை கட்டி கொண்டு பிரசாரத்திற்கு பலரும் வேகமெடுப்பதை காண முடிகிறது.

Related Tags :
Next Story