பணிகள் நிறைவுபெற்றதால் கோவை காந்திபுரம் 2-வது மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்க முடிவு


பணிகள் நிறைவுபெற்றதால் கோவை காந்திபுரம் 2-வது மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்க முடிவு
x
தினத்தந்தி 22 Dec 2019 3:45 AM IST (Updated: 22 Dec 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

பணிகள் நிறைவு பெற்றதால் கோவை காந்தி புரம்2-வதுமேம்பாலத்தில்மோட்டார் சைக்கிள்களைஅனுமதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவைகாந்திபுரம்100 அடி ரோட்டில் இருந்துசித்தாபுதூர்சின்னசாமிரோடுவரை 1.7 கிலோமீட்டர் தூரத்துக்குரூ.75கோடி செலவில்2-வதுமேம்பாலம்கட்டப்பட்டுள்ளது. 7 மீட்டர் அகலத்துடன்இருவழிப்பாதையாகஇந்த பாலபணிகள்நிறைவு பெற்றுள்ளது.

காந்திபுரம்ஜி.பி.சிக்னல்பகுதியில் 1-வதுமேம்பாலத்துக்கு மேல் இந்த பாலம் செல்வதால்அந்த பகுதியில்மட்டும்இந்த பாலம் 55 அடி உயரத்துக்கு உள்ளது.கோவையிலேயேமிக அதிக உயரம் உள்ள இந்த மேம்பாலத்தின்கட்டுமான பணிகள்நிறைவடைந்துள்ளது. பாலத்தை ஒட்டிசர்வீஸ்சாலைஅமைப்பது உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே உள்ளது.

இந்த பாலத்தின்திறப்பு விழா இன்னும் ஒருமாதத்துக்குள்நடைபெற உள்ளது.காந்திபுரம்பகுதியில் போக்குவரத்து நெரிசல்இருப்பதால் மோட்டார் சைக்கிள்களை மட்டும்இந்த பாலத்தில்செல்ல அனுமதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துநெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள்கூறும்போது, ‘மேம்பால கட்டுமானபணிகள்பெருமளவில் முடிந்துவிட்டது. மோட்டார் சைக்கிள்களை மட்டும் முதல்கட்டமாக அனுமதித்துவிட்டு, மற்றவாகனங்களை பால திறப்புவிழாவுக்கு பின்னர்அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடுத்த வாரம் முறைப்படி அறிவிப்புவெளியாகும்’ என்று தெரிவித்தனர்.

காந்திபுரம்2-வதுமேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் களை அனுமதிப்பதின் மூலம் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து அவினாசி ரோட்டை அடைய பலசிக்னல்கள்குறுக்கிடுகின்றன.இந்த பாலத்தில்போக்குவரத்துதொடங்கும்போது15 நிமிடம்வரை வாகனஓட்டுனர்களுக்குநேரம்மிச்சமாகும்என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

காந்திபுரம்பகுதியில் 1-வதுமேம்பாலத்தில் வாகனங்கள்ஏறுவதற்கும்,இறங்குவதற்கும்வசதி இல்லாததால்அப்பகுதியில்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பாரதியார் ரோடு மற்றும் 100 அடி ரோடு பகுதியில் ஏறி, இறங்கும் வகையில் 1-வதுமேம்பாலத்தில்சாய்வுதளவசதி செய்யப்படஇருப்பதாகவும்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story