வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள வல்லக்கோட்டை ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story