பென்னாகரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பென்னாகரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2019 3:45 AM IST (Updated: 22 Dec 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். முன்னாள் ராணுவ வீரர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி வெண்ணிலா. இவர் எட்டியாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இவர்களது மகள் திவ்யபிரபஞ்ச கீதாஞ்சலி (வயது18). இவர் தர்மபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வெண்ணிலா பள்ளிக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். பணி முடிந்து வெண்ணிலா மாலை வீடு திரும்பினார்.

போலீசார் விசாரணை

அப்போது மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story