குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து உண்ணாவிரதம் இந்திய மாணவர் சங்கத்தினர் 18 பேர் கைது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாமக்கல்லில் உண்ணாவிரதம் இருந்த இந்திய மாணவர் சங்கத்தினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பபெற வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட இந்திய மாணவர் சங்கத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
18 பேர் கைது
இதனிடையே உரிய அனுமதி பெறாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் உள்பட 18 பேரும் மினிபஸ்சில் ஏற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story