குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: வடகரையில் முஸ்லிம்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: வடகரையில் முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 3:53 AM IST (Updated: 22 Dec 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கோட்டை அருகே வடகரையில் நேற்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் ஜமாத், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோ‌‌ஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் உள்பட தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதையொட்டி தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிரு‌‌ஷ்ணன் தலைமையில் அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிரு‌‌ஷ்ணன், சஞ்சய்காந்தி, செல்வி உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story