கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மும்பை-செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரெயில்; மத்திய ரெயில்வே அறிவிப்பு
மும்பை-செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மும்பை - செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரெயில்களை இயக்க உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வருகிற 24, 31 மற்றும் ஜனவரி 7-ந் தேதிகளில் பகல் 12.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 01063) மறுநாள் மதியம் 1 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
இதே ரெயில் (01064) மறுமார்க்கமாக வருகிற 25 மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.
இந்த ரெயில் தாதர், கல்யாண், லோனவாலா, புனே, தவுன்ட், சோலாப்பூர், கல்புர்கி, வாடி, யாத்கிர், ராய்சூர், மந்திராலயா ரோடு, அதோனி, குண்டக்கல், கூட்டி, தடிபத்ரி, ஏரகுண்ட்லா, கடப்பா, ரஜாம்பேட்டா, ரேணிகுண்டா, திருத்தனி, காஞ்சீபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story