செம்மஞ்சேரியில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை
செம்மஞ்சேரியில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மரியாராஜ். இவருக்கு ஒரு மகள், 3 மகன்கள் இருந்தனர். இவரது மூத்த மகள் கிரேஸி (வயது 18). இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு 8½ மணியளவில் எல்லோரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென படுக்கை அறைக்கு ஓடிச் சென்ற கிரேஸி கதவை தாழிட்டு துப்பட்டாவில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கி கொண்டிருந்த கிரேஸியை மீட்டு அருகில் உள்ள செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் யாரும் இல்லாததால் சிகிச்சை அளிக்க தாமதமானதாக தெரிகிறது. அதற்குள் கிரேஸி இறந்து விட்டார்.
டாக்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்காமல் கிரேஸி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டு அனைவரையும் கலைந்து செல்லும்படி செய்தனர். பின்னர் கிரேஸி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிரேஸி காதல் விவகாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.

Related Tags :
Next Story