வீட்டுமனை தகராறு இரு தரப்பினரிடையே மோதல்; 14 பேர் கைது
வீட்டுமனை தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அக்கரப்பாக்கம் கிராமம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 56) என்பவருக்கும் அருகிலுள்ள வீட்டை சேர்ந்த முனுசாமி(57) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் செல்வம் தனது வீட்டை புதுப்பிக்க டிராக்டரில் பொருட்களை கொண்டு வந்தார். இதை பார்த்த முனுசாமி அந்த டிராக்டரை வழிமறித்து இந்த வழியாக செல்லக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து முனுசாமி தனது மருமகன் மற்றும் புன்னப்பாக்கத்தில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். முனுசாமியின் உறவினர்கள் புன்னப்பாக்கத்தில் இருந்து ஒரு டிராக்டர், 3 மோட்டார் சைக்கிளில் பட்டா கத்தி, உருட்டுக்கட்டையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செல்வம் மற்றும் அவரது மனைவி அம்முவை தாக்க முற்பட்டனர்.
அவர்களிடம் இருந்து செல்வமும் அம்முவும் தப்பித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து செல்வம் மற்றும் முனுசாமி ஆகியோர் தனித்தனியாக பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின்பேரில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு, சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரு தரப்பையும் சேர்ந்த அக்கரப்பாக்கம் மேட்டுகாலனியை சேர்ந்த முனுசாமி, வெண்ணிலா (50), ரகுபதி (30), அர்ச்சனா (28),மணிகண்டன் (28), செல்வம்(48), அம்மு 30), வாசு (35), அர்ச்சனா (28) அசோக்குமார்(24), வேல்முருகன்(28), விக்னேஷ்(36), சந்திரசேகர் என்ற அப்பு (34), புன்னப்பாக்கத்தை சேர்ந்த 18 வயதானவர் என மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story