தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை


தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 23 Dec 2019 3:30 AM IST (Updated: 23 Dec 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.

தூத்துக்குடி, 

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவ மக்கள் வீடுகளின் முன்பு அலங்கார நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். வீடுகள் மட்டுமின்றி, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்தும், விதவிதமான மலர் அலங்காரங்களையும் செய்து வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், நட்சத்திரங்கள் விற்பனைக்காக கடைகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இங்கு காகிதத்தால் ஆன நட்சத்திரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பந்து, பூக்கள், தாமரை மற்றும் பல அடுக்குகளாக தொங்கும் நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று கிறிஸ்துமஸ் மரங்கள், பொம்மைகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. இந்த அலங்கார பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

Next Story