விளையாட்டு வினையானது: ஊஞ்சலில் ஆடியபோது கழுத்தில் கயிறு இறுக்கியதால் மாணவன் சாவு
ஊஞ்சலில் விளையாடிக்கொண்டு இருந்த பள்ளி மாணவனின் கழுத்தில் நைலான் கயிறு இறுக்கியதால் பரிதாபமாக இறந்தான்.
சென்னை,
சென்னை அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கீர்த்திவாசன்(வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் கீர்த்திவாசன், தனது வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த நைலான் கயிறு, எதிர்பாராதவிதமாக சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதில் கீர்த்திவாசன் மயங்கி விழுந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், கீர்த்திவாசனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திவாசன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊஞ்சலில் விளையாடிய பள்ளி மாணவன், கழுத்தில் கயிறு இறுக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story