‘பாஸ்டேக்’ முறைக்கு மாறாத வாகன ஓட்டிகளால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிப்பு
பாஸ்டேக் முறைக்கு மாறாத வாகன ஓட்டிகளால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அணைக்கட்டு,
வேலூரில் இருந்து நேற்று காரில் 3 பேர் திருப்பத்தூருக்கு சென்றனர். அந்த கார், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் ஊழியரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் நரேஷ் கூறியதாவது:-
மத்திய அரசு கடந்த 15-ந் தேதி முதல் ‘பாஸ்டேக்’ கட்டணம் முறையை நடைமுறை படுத்தியுள்ளது. அதற்காக இருமார்கத்திலும் தலா 3 ‘பாஸ்டேக்’ வழிப்பாதைகளை ஒதுக்கியுள்ளோம்.
அந்த வழிபாதைகளில் செல்லும் வாகனங்கள் 1 நிமிடம் கூடி நிற்காமல் செல்கிறது. இதனால் ‘பாஸ்டேக்’ வழிப்பாதைகள் காலியாகவே உள்ளது. கட்டணம் செலுத்திவிட்டு செல்லும் வாகனங்களுக்கு தலா 2 வழிபாதைகளை அமைத்துள்ளோம். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கின்றன. அதற்காக எங்கள் (சுங்கச்சாவடி) ஊழியர்களை வாகன ஓட்டிகள் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
45 சதவீதம் பேர் தான் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறியுள்ளனர். இன்னும் 55 சதவீதம் பேர் மாறாமல் உள்ளனர். அடுத்த மாதம் (ஜனவரி) முதல் கட்டணம் வசூல் செய்யும் பாதைகள் குறைக்கப்படும். அதாவது இருமார்கத்திலும் தலா 1 வழிப்பாதையில் மட்டுமே கட்டணம் வசூல் செய்யும் வாகனங்கள் செல்லும்’ என்றார்.
Related Tags :
Next Story