கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கூட்டமைப்பினர் மொட்டை அடித்து ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கூட்டமைப்பினர் மொட்டை அடித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள்கூட்டமைப்பினர்மொட்டை அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுச்சேரி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கட் கிழமை) புதுச்சேரிக்குவருகை தருகிறார். இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள்கூட்டமைப்பு சார்பில்கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் மொட்டைஅடித்து கண்டனஆர்ப்பாட்டம்அண்ணா சிலைஅருகே நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர்கிரண்பெடியை திரும்பபெற வேண்டும், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமைதிருத்த சட்டத்தைரத்து செய்ய வேண்டும், என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மொட்டை அடித்தனர்

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள்கூட்டமைப்பு தலைவர்புவியரசன்தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் குண.சிலம்பரசன், மதுசூதனன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்செயலாளர் சலீம்,விடுதலை சிறுத்தைகள்கட்சிமுதன்மை செயலாளர்தேவ.பொழிலன்ஆகியோர்சிறப்புரையாற்றினார்கள்.

மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன்,வழிகாட்டுக்குழுதலைவர்இதயவேந்தன், தலித் பாதுகாப்புஇயக்க தலைவர்பிரகாஷ்,இந்திய தேசியஇளைஞர்முன்னணி தலைவர்கலைப்பிரியன்உள்பட பலர் கண்டன உரையாற்றினார்கள். இதில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகள்,இயக்கங்களை சேர்ந்ததலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது 4 பேர் மொட்டை அடித்தனர்.


Next Story