இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் - காங்கிரஸ் புறக்கணிப்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சுயேச்சை உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இதை காங்கிரஸ் புறக் கணித்துவிட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
இதில் பா.ஜனதாவை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் குமட்டஹள்ளி (அதானி தொகுதி), ஸ்ரீமந்த் பட்டீல்(காக்வாட்), ரமேஷ் ஜார்கிகோளி(கோகாக்), சிவராம் ஹெப்பார்(எல்லாப்பூர்), பி.சி.பட்டீல்(இரேகெரூர்), அருண்குமார் கொத்தூர்(ராணிபென்னூர்), ஆனந்த்சிங்(விஜயநகர்), சுதாகர்(சிக்பள்ளாப்பூர்), பைரதி பசவராஜ்(கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), கோபாலய்யா(மகாலட்சுமி லே-அவுட்) மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. (ஒசக்கோட்டை) ஆகியோர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் காகேரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஞ்சுநாத்(உன்சூர்), ரிஸ்வான் ஹர்ஷத்(சிவாஜிநகர்) ஆகியோர் பதவி ஏற்கவில்லை. இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. அக்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் வேறு ஒரு நாளில் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி பிரமாண நிகழ்ச்சி முடிவடைந்ததும், புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடியூரப்பாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும், சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ., முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் அவர் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

Related Tags :
Next Story