திருமங்கலத்தில் காதல் திருமணம் செய்த மில் ஊழியர் தீக்குளித்து சாவு


திருமங்கலத்தில் காதல் திருமணம் செய்த மில் ஊழியர் தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 23 Dec 2019 4:06 AM IST (Updated: 23 Dec 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம், 

திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த மூக்கையா என்பவரது மகன் வேல்முருகன்(வயது 28). திரளியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வைரமணி.

இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் முத்துபாண்டி (27). டிரைவரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story