மங்களூருவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
மங்களூருவில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மங்களூரு,
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதையடுத்து கர்நாடகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த கடந்த 18-ந் தேதி முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி 144 தடை உத்தரவை மீறி கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மங்களூரு அருகே கந்தக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜலீல், குத்ரோலி பகுதியைச் சேர்ந்த நவுசீன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து மங்களூருவில் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மங்களூருவுக்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி மங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மங்களூருவுக்கு வந்தவர்கள் போக்குவரத்து வசதி இன்றி திணறிப்போயினர். பின்னர் அவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வீட்டைவிட்டே வெளியே வரக்கூடாது என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் மங்களூரு முற்றிலும் முடங்கிப்போனது. இணையதள வசதியும் அடியோடு முடக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓரளவுக்கு அமைதி திரும்பியது. இதையடுத்து மங்களூருவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கலவரம் ஏற்பட்டது குறித்தும், மங்களூருவில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
அதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினரையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும், போலீசார் முன்எச்சரிக்கையாக செயல்படாதது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். ஆனால் அவர் எந்த வகையான விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாததால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் நேற்று காலையில் கடைகள் திறக்கப்பட்டன. ஒருசில அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. இதனால் மங்களூரு மாநகர் நேற்று சகஜநிலைக்கு திரும்பியது.
பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மங்களூரு உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. போலீசாரின் கெடுபிடிகளுக்கு இடையே மக்கள் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது தெரியாமல் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் நேற்று முதல் மங்களூருவில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டது. இதுகுறித்து மங்களூரு வாசி ஒருவர் கூறுகையில், “கடந்த 19-ந் தேதியில் இருந்து 2 நாட்களாக இணையதள சேவைகள் முற்றிலும் முடங்கி இருந்தன. 21-ந் தேதி இரவு 10 மணி முதல், அதாவது 48 மணி நேரம் கழித்து மீண்டும் இணையதள சேவைகள் வழங்கப்பட்டன. இணையதள சேவை இன்றி செல்போன்களையும், கணினிகளையும் இயக்க முடியாமல் இருந்தது. தற்போது மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது“ என்று கூறினார்.
இதற்கிடையே நேற்று துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். மேலும் இந்த நிவாரண நிதியை அவர்களின் குடும்பத்தினரிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். முதலில் அவர் குத்ரோலிக்கு சென்று துப்பாக்கிச்சூட்டில் பலியான நவுசீனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் நவுசீனின் குடும்பத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
அதையடுத்து அவர் கந்தக்கிற்கு சென்று அப்துல் ஜலீலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அப்துல் ஜலீலின் குடும்பத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். அதன்பின்னர் அவர், போராட்டத்தின்போது காயமடைந்து மங்களூருவில் உள்ள ஹைலேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த சந்தர்ப்பத்தில் போராட்டத்தின்போது காயமடைந்த மங்களூரு முன்னாள் மேயர் அஷ்ரப்பையும் சந்தித்து குமாரசாமி நலம் விசாரித்தார்.
அதன்பின் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இச்சம்பவம் குறித்து மாநில அரசு ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்“ என்று கூறினார். இதே கருத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் மங்களூருவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மங்களூருவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் விடுதிகளில் தங்கி படித்து வந்த 300 கேரள மாணவ-மாணவிகள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு ஆகியவற்றால் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் மங்களூருவிலேயே சிக்கித்தவித்தனர்.
இதுபற்றி அறிந்த கேரள அரசு, கர்நாடக அரசை தொடர்பு கொண்டு கேரள மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் படியும், அவர்களை பத்திரமாக மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து கேரள அரசுக்கு சொந்தமான 5 அரசு பஸ்கள் மங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டு, அந்த பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் மாணவ-மாணவிகள் 300 பேரும் கேரளாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் காசர்கோடுவை சென்றடைந்தனர்.
இதுகுறித்து கேரள மாணவ-மாணவிகள் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவால் விடுதிகளில் தங்கியிருந்த எங்களுக்கு சரியாக உணவு கிடைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக நாங்கள் சரியாக உணவு இல்லாமல் கஷ்டப்பட்டோம். கல்லூரி விடுதிகளில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தோம். இந்த நிலையில்தான் நாங்கள் கேரள அரசை தொடர்பு கொண்டு உதவி கோரினோம். எங்களது கேரள அரசு காப்பாற்றி விட்டது“ என்று கூறினர்.
இந்த நிலையில் நேற்று மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது குறித்தும், இன்று(திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“நேற்று(அதாவது நேற்று முன்தினம்) மங்களூருவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. அதனால் இன்று(அதாவது நேற்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நேரத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் எந்தவித பதற்றமும், பயமும் இன்றி வெளியே நடமாடினர்.
இணையதள சேவைகளும் வழங்கப்பட்டு விட்டன. கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது, மக்களுக்கு வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தான் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
முதலில் ஊரடங்கு உத்தரவு கடந்த 20-ந் தேதி வரைதான் அமல்படுத்தப்பட்டது. பின்னர் மங்களூருவில் பதற்றம் நிலவியதால் 22-ந் தேதி (அதாவது நேற்று) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. நாளை(அதாவது இன்று) ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக வாபஸ் பெறப்பட வாய்ப்பு உள்ளது. அதுபற்றி இதுவரையில் எங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. முறையான அறிவிப்பு வந்தவுடன் ஊரடங்கு உத்தரவு முழுமையாக வாபஸ் பெறப்படும்.
முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமை(அதாவது இன்று) முதல் விலக்கிக் கொள்வோம் என்று அறிவித்துள்ளார். அதன்படியே நடக்கும் என்று நம்புகிறோம்.“ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப் பட்டதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

Related Tags :
Next Story