சைக்கிள்கள் சீரமைக்கும் இடமாக மாறிய அரசு பெண்கள் பள்ளி


சைக்கிள்கள் சீரமைக்கும் இடமாக மாறிய அரசு பெண்கள் பள்ளி
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 23 Dec 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 250-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த ஆண்டு விலையில்லா சைக்கிள்கள் வழங்க பட வேண்டும். ஆனால் மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிளின் உதிரிபாகங்கள், சைக்கிள் சக்கரம், உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்து பள்ளியின் நுழைவு வாயில் அருகே குவியல் குவியலாக போட்டு வைத்து அங்கேயே சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

சீரமைத்து வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களை படப்பை அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கபடவுமில்லை. மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு வழங்கபட வேண்டிய சைக்கிள்களும் இங்கேயே சீரமைக்கப்பட்டு வருவதாகவும். சைக்கிள் தயாரிப்புக்கான பொருட்கள் அனைத்தும் மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பின்றி அப்படியே கிடைப்பதால் தரமற்று போய்விடும் என பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story