காஞ்சீபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


காஞ்சீபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 5:59 PM GMT)

காஞ்சீபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். பெயர் சேர்த்தல் தொடர்பான முகாம் அடுத்த மாதம் நடைபெறும்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2020-ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி பெற்றுக்கொண்டார். அப்போது சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அ.அமிதுல்லா, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, காஞ்சீபுரம் நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37,99,888. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 18,79,117. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19,20,277. இதர வாக்காளர்கள் எண்ணிக்்கை 494.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்கள் அடுத்த மாதம் 22-ந் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்படும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மனுக்கள் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற ஜனவரி 4,5,11,12-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story