சாவிலும் இணை பிரியாத சகோதரர்கள்: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் சாவு ஒரே இடத்தில் உடல் தகனம்
மயிலாடுதுறை அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் அவரது தம்பியும் பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை குருக்கள் பண்டார தெருவை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 56). ஆட்டோ டிரைவர். இவருடைய தம்பி பன்னீர்செல்வம்(50).தொழிலாளி.
பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பன்னீர்செல்வம் உயிர் பிழைக்க இனி வாய்ப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து சாவு
இதனால் நேற்று முன்தினம் அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு உறவினர்கள் அழைத்து வந்து விட்டனர். தனது தம்பி இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நினைத்து மதிவாணன் மிகுந்த கவலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் மதிவாணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் சுருண்டு விழுந்தார்.இதனால் அவரை வீட்டில் இருந்தவர்கள் எழுப்ப முயன்றனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் படுக்கையில் இருந்த பன்னீர்செல்வம் தனது அண்ணன் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவரும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
ஒரே இடத்தில் உடல் தகனம்
வாழ்வில் இணைபிரியாமல் இருந்த அண்ணன்-தம்பி இருவரும் சாவிலும் ஒன்றாக இறந்ததை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இருவரது உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மதிவாணன்-பன்னீர்செல்வத்தின் உடல்களை ஒரே வாகனத்தில் ஏற்றி மயானத்துக்கு கொண்டு சென்று ஒரே இடத்தில் தகனம் செய்தனர்.அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story