வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் தாசில்தார் நடவடிக்கை
நாகை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை நம்பியார்நகர் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை தாசில்தார் பிரான்சிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாசில்தார் பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் நம்பியார்நகர் பழைய மீனவர் காலனி தெருவுக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஜெயபால் மனைவி சிவபாக்கியம்(வயது55) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 50-க்கும் மேற்பட்ட சாக்குமூட்டைகளில் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story