திருவள்ளூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் 33 லட்சம் பேர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் 33 லட்சம் பேர்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்கள் 33 லட்சத்து 8 ஆயிரத்து 252 பேர் ஆகும். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மொத்தம் 28 ஆயிரத்து 828 பேர் புதியதாக சேர்த்துள்ளனர். அதேபோல 5 ஆயிரத்து 886 பேரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் தற்போது புதியதாக பெயர் சேர்க்க விரும்புபவர்களுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5, 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அப்போது, நேரில் ஆஜராகி படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story