மானாமதுரையில், மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்


மானாமதுரையில், மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 8:25 PM GMT)

மானாமதுரையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் தலை குப்புற கவிழ்ந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மானாமதுரை,

மானாமதுரை பைபாஸ் ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மானாமதுரை அருகே உள்ள சன்னாதி புதுகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களை தனியார் மினி வேன் ஒன்று பள்ளிக்கு ஏற்றி வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இந்த மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

அதிலிருந்த பள்ளி மாணவர்கள் லித்தீஸ்வரன்(வயது8), லோகேஸ்வரன், பிரதாப், மாணவி ஷர்மிளா, கிரோஷன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியாக வாகனத்தில் சென்றவர்கள் விரைந்து வந்து மாணவர்களை வேனில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story