மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து திருடிய டிப்-டாப் வாலிபர் மகனின் நண்பர் என கூறி கைவரிசை
மோகனூர் அருகே மூதாட்டியின் வீட்டுக்குள் மகனின் நண்பர் என கூறி புகுந்த டிப்-டாப் வாலிபர் நகையை திருடி சென்று கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகனூர்,
மோகனூர் அருகே கீழ்பரளியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி செல்லம்மாள் (62). இவர்களது மகன் கண்ணன் திருமணமாகி மோகனூரில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று செல்லம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, நான் உங்கள் மகனின் நண்பர் என்று கூறி தனது வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைப்பு விடுக்க வந்ததாக கூறினார்.
விழாவில் வைக்க அருகம்புல், மாவிலை தேவைப்படுவதாகவும் கூறினார். இதனை நம்பிய செல்லம்மாள் அந்த வாலிபரை வீட்டுக்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு வீட்டின் பின்புற பகுதியில் அருகம்புல்லை பறிக்க சென்றார். இதையடுத்து திடீரென அந்த நபர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5½ பவுன் தாலிக்கொடியை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
வலைவீச்சு
இதையடுத்து வீட்டுக்குள் வந்த மூதாட்டி செல்லம்மாள் அந்த வாலிபர் இல்லாததை கண்டு, பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மூதாட்டியின் மகன் கண்ணன் இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து திருடிய டிப்-டாப் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story