தென்னை மட்டை ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்தது 3 பேர் படுகாயம்
அதிராம்பட்டினம் அருகே தென்னை மட்டை ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் மாளியக்காடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே தென்னை மட்டைகள் ஏற்றி வந்த ஒரு மினிலாரி திடீரென கவிழ்ந்தது. இதனால் மினிலாரியில் ஏற்றப்பட்ட தென்னை மட்டைகள் சாலையில் சிதறிக்கிடந்தன.
மேலும் மினிலாரியின் முகப்பு கண்ணாடியை உடைத்து கொண்டு அதில் இருந்து 3 பேர் காயத்துடன் வெளியே வந்ததாக மக்கள் தெரிவித்தனர். இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? இவர்கள் எந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்? இந்த மினிலாரி எங்கிருந்து வந்தது? போன்ற விவரங்கள் தெரியவில்லை.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மினிலாரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மினிலாரியில் வந்தவர்கள் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினிலாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story