மேல்சிறுவள்ளூர், தியாகதுருகத்தில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
மேல்சிறுவள்ளூர் மற்றும் தியாகதுருகத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூரில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆலோசனைப்படி நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் மஞ்சுநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து எவ்வாறு பணியாற்றுவது, கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சங்கரன், ஜாகிர் உசேன், துரை, சேட்டு, முனுசாமி, தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அஷ்ரப் அலி வரவேற்றார். உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மனோகர், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமால், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட இளைஞரணி செயலாளர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய கடுமையாக உழைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய அவைத்தலைவர் கணேசன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஆறுமுகம், நகர அவைத்தலைவர் ஜோதிலிங்கம், எரையூர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகதுருகத்தில் ஒன்றிய, நகர தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அவைத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், இளையராஜா, அவைத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க துணை செயலாளர் தாமு சக்திவேல், மாவட்ட அவைத்தலைவர் கோவி.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய திண்ணை பிரசாரம் செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திம்மலை சிவலிங்கம், மாவட்ட விவசாய பிரிவு துணைச்செயலாளர் சந்தோஷ், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோவிந்தராசு. பாலு, சங்கர், சண்முகம், செல்வராஜ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story