திருமங்கலம் அருகே, விலங்குகளை பலியிட்டு பூஜை - போலீசார் விசாரணை
திருமங்கலம் அருகே நாய், கோழி, ஓணான் ஆகியவற்றை பலியிட்டு மந்திரவாதி பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் நான்கு வழிச்சாலை ராஜபாளையம் ரோடு அருகே நாய், கோழி, ஓணான் ஆகியவற்றை பலி கொடுத்து பூஜை செய்யப்பட்டு இருந்தன. அத்துடன் வாழை இலையில் மந்திரம் செய்யப்பட்ட குங்குமம், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் இதுபோன்ற பூஜைகள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. விலங்குகளை பலி கொடுத்து நடைபெறும் பூஜை செய்வினை செய்தல் உள்ளிட்டவை நடத்துவதற்காக நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.
பூஜை செய்யப்பட்ட இடத்தில் மதுபாட்டில், சுருட்டு, திருநீர் உள்பட பல்வேறு பொருட்களை நள்ளிரவில் வைத்து மந்திரவாதிகள் வழிபடுகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மந்திரவாதி பூஜை செய்தாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story