குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில், இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில், இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இஸ்லாமிய தோழமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோ‌‌ஷங்கள்

மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், தி.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story