மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற பா.ஜனதா பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது


மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற பா.ஜனதா பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

மனைவிக்காக வாக்குசேகரிக்க சென்ற பா.ஜனதா பிரமுகரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

ஆனைமலை,

கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் பொன்னாலம்மன் துறை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது51). பா.ஜனதா பிரமுகர். இவருடைய மனைவி உஷாநந்தினி. இவர் காளியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து நரிக்கல்பதி பகுதிக்கு காரில் சென்று சந்திரன் பிரசாரம் செய்து வாக்குசேகரித்தார். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிமாறன் (19) பெரிய கல்லை எடுத்து கார் கண்ணாடி மீது வீசினார். இதில் அந்த காரின் முன்புற கண்ணாடி உடைந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரசாந்த் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story