திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
நினைவு தினத்தையொட்டி திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி ெசலுத்தினர்.
திருச்சி,
அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுபோல் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாய்லர் ஆலை அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா.ராசு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க., தே.மு.தி.க.
அ.ம.மு.க.வினர் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி.யும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதுபோல் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
முசிறி
எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு முசிறி கைகாட்டியில் எம்.ஜி.ஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முசிறி தொகுதி எம்.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுபோல் தா.பேட்டை, மேட்டுபாளையம், தும்பலம், மகாதேவி உள்பட பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Related Tags :
Next Story