உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களை மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் - கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களை மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்களை தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை, 

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் மண்டல அலுவலா்கள் மற்றும் மாவட்ட போலீசாருக்கான பயிற்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில் கலெக்டர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் மண்டல அலுவலா்களின் பணி மிகவும் முக்கியமானது. வாக்குப்பதிவிற்கு தேவையான உபகரணங்களை நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். வாக்குப்பதிவு மையங்களை அந்தந்த மண்டல அலுவலா்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்திட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்திட வேண்டும்.

மண்டல அலுவலா்கள் வாக்குப்பதிவு நிலவரங்களை அட்டவணையிட்டு தோ்தல் அலுவலா்களுக்கு சமா்ப்பிக்கவேண்டும். தோ்தலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சோ்க்கும் வரை பணிகள் மேற்கொள்ளவேண்டு்ம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நோ்முக உதவியாளா் லோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் காமராசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Next Story