குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:15 AM IST (Updated: 25 Dec 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சிதம்பரம் காந்தி சிலை அருகே முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துல்காதர் மரைக்காயர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் ம.ம.க. மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் ஷபீகுர்ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள் பரங்கிப்பேட்டை முகமதுயூனிஸ், சிதம்பரம் முகமதுஜீயாவுதின், தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ரமே‌‌ஷ்பாபு, இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், மஹால்லா ஜமாஅத், சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story