சங்கரன்கோவில் அருகே கோஷ்டி மோதல்; 4 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் மணி மகன் முத்தையா (வயது 25).
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் மணி மகன் முத்தையா (வயது 25). இவர் சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்தையா ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நடுமலையடிப்பட்டியை சேர்ந்த தனசீலன் மகன் ராஜதுரை (24) தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதனை முத்தையா கண்டித்தாராம். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ராஜதுரைக்கு ஆதரவாக நடுமலையடிப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பூவரசன் (18), கண்ணன் மகன் பிரபாகரன் (18) உள்ளிட்ட சிலரும், முத்தையாவிற்கு ஆதரவாக சுப்புலாபுரத்தை சேர்ந்த சிலரும் வந்து கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.
முத்தையா அளித்த புகாரின் பேரில் ராஜதுரை, பூவரசன், பிரபாகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ராஜதுரை அளித்த புகாரின் பேரில் முத்தையாவை கைது செய்தனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர். இந்த கோஷ்டி மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story