அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார், டெல்லி மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும் பிரிதிவிராஜ் சவான் பேட்டி
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார், டெல்லி மாநிலங்களில் பாரதீய ஜனதா தோல்வியை சந்திக்கும் என்று பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
மும்பை,
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார், டெல்லி மாநிலங்களில் பாரதீய ஜனதா தோல்வியை சந்திக்கும் என்று பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
வீழ்ச்சி தொடங்கி விட்டது
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது குறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதில் இருந்து அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. அரியானா, மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்து உள்ளன. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேலிட தலைவர்களை போல அல்லாமல் மோடி முழுவீச்சில் பிரசாரம் செய்தபோதிலும், பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது. மாநில தேர்தல்களில் மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை என்பதை தான் இது காட்டுகிறது.
பீகார், டெல்லி
அடுத்த ஆண்டு பீகார் மற்றும் டெல்லி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களிலும் பாரதீய ஜனதா தோல்வியை சந்திக்கும்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 46 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லை. பாரதீய ஜனதா அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்காததால் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளது.
மத்திய அரசின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை ஆகிய பிரச்சினைகளை காங்கிரஸ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story