திருவண்ணாமலை, கோவை, கிருஷ்ணகிரிக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 1,331 போலீசார் - வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்றனர்


திருவண்ணாமலை, கோவை, கிருஷ்ணகிரிக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 1,331 போலீசார் - வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்றனர்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 4:21 PM GMT)

ஊரகஉள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருவண்ணாமலை, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் இருந்து 1,331 போலீசார் சென்றனர்.

வேலூர், 

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நாளையும் (வெள்ளிக்கிழமை), 2-ம் கட்ட தேர்தல் வருகிற 30-ந் தேதியும் நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் வெளிமாவட்டங்களில் நடக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 1,211 போலீசாரும், கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தலா 60 போலீசார் என மொத்தம் 1,331 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story